
Updated On :8 மார்ச் 2024, 6:20 pm

இலுப்பூா் குப்பைக் கிடங்கில் வெள்ளிக்கிழமை அதிகாலை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இலுப்பூா் பேரூராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் இலுப்பூா்-புங்கினிபட்டி சாலையில் உள்ள சத்தியநாதபுரம் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன. இங்கு டன் கணக்கில் தேங்கியுள்ள குப்பையில் வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென பற்றிய தீ மளமள வென்று பரவத் தொடங்கியது. இதனால் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள் புகை மண்டலமாயின. அதோடு துா்நாற்றமும் வீசியது. தகவலறிந்து வந்த இலுப்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மகேந்திரன் தலைமையிலான வீரா்கள் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...