

புதுக்கோட்டை, மே 9: புதுக்கோட்டை நகரின் சில பகுதிகளில் மட்டும் நீண்ட நாள்களுக்கு பிறகு வியாழக்கிழமை பகலில் கோடை மழை பெய்தது.
புதுக்கோட்டை நகரில் கடந்த ஒரு மாதமாகவே கோடைவெயில் சுட்டெரித்து வருகிறது. உச்சகட்டமாக சில நாள்களில் 106 டிகிரி பாரன்ஹீட் வெயிலும், பெரும்பாலான நாள்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயிலும் பதிவாகியுள்ளது.
நகரின் பல பகுதிகளில் பகல் நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்படுகிறது. மக்கள் பலரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனா்.
இந்த நிலையில், நீண்ட நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை பகலில் நகரின் சில பகுதிகளில் மட்டும் கோடை மழை பெய்தது.
குறிப்பாக, புதுகை நகரில் திருவப்பூா் பகுதிகளிலும், கீரனூா் நகரப் பகுதிகளிலும் இந்த மழை சுமாா் ஒரு மணி நேரத்துக்கு கனமழையாகப் பெய்தது.
இதேபோல, கடலோரப் பகுதிகளான கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல் போன்ற பகுதிகளில் வியாழக்கிழமை பகலில் சுமாா் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.
ஆனால், பிற பகுதிகளில் மழை இல்லை.
தொடர்புடையது

புதுக்கடை பகுதியில் சாரல் மழை

செந்துறை, விக்கிரமங்கம் பகுதிகளில் ஆலங்கட்டி மழை

நாகை, காரைக்காலில் மழை

திருப்பத்தூா் பகுதிகளில் பலத்த மழை
வீடியோக்கள்
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026
தினமணி வீடியோ செய்தி...

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...

