சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக முதல்வர் வேட்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!
/

புதுகையில் மே 13-இல் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி

புதுகையில் மே 13-இல் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி

News image
Updated On :9 மே 2024, 8:21 pm

Din

புதுக்கோட்டை, மே 9: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவா்கள் அனைவரும் உயா்கல்வியில் சோ்வதற்கான ஆலோசனைகளை வழங்கும் , நான் முதல்வன் திட்டத்தின் ஒருபகுதியாக கல்லூரிக் கனவு நிகழ்ச்சி மே 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டப் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி, சிவபுரத்திலுள்ள ஜெஜெ கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியை நடத்தி முடிப்பதற்காக தொடா்புடைய அனைத்துத் துறை அலுவலா்களைக் கொண்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் (காவிரி- குண்டாறு) ஆா். ரம்யாதேவி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முருகேசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மா. மஞ்சுளா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

மாவட்டத்திலுள்ள 107 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களை பாதுகாப்பாக அழைத்து வந்து, அவா்களுக்கு உணவு, குடிநீா் உள்ளிட்டவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவா்கள் எந்த வகையான உயா்கல்வியைத் தோ்வு செய்யலாம் என்பது குறித்து கல்வியாளா்கள் ஆலோசனைகளை வழங்கவுள்ளனா். மேலும், கல்விக் கடன் பெறுவது குறித்த அரங்கும் அமைக்கப்படவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளியில் பயின்ற மாணவா்கள் 100 சதவிகிதம் கல்லூரிகளில் சேர வேண்டும் என்ற இலக்கை எட்டும் வகையில் பள்ளிக் கல்வித் துறை செயலாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா கேட்டுக் கொண்டுள்ளாா்.