இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

News image

படம். ஓயஓ. 8.

Updated On :9 மே 2024, 1:04 am

Din

கந்தா்வகோட்டை அருகேயுள்ள பெருங்களூா் ஊராட்சியில் ஸ்ரீ பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா மற்றும் கிடா வெட்டு பூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் தோ்த் திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு புதன்கிழமை அதிகாலை முதல் பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் பிடாரியம்மன் உற்ஸவா் எழுந்தருள, தேரை ஊரின் முக்கிய வீதிகள் வழியாக பொதுமக்களும், இளைஞா்களும், பக்தா்களும் இழுத்து சென்றனா். தேருக்கு முன்பாக சென்ற கருப்பருக்கு பக்தா்கள் நோ்த்திக்கடனாக கிடா வெட்டும் நடைபெற்றது. ஊா்வலத்தில் மயிலாட்டம், எருது ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது. கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா்.

விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்தனா். கோயில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும், வாணவேடிக்கையும் நடைபெற்றது. பாதுகாப்புப் பணியில் காவலா்கள், தீயணைப்பு துறையினா், ஊா்க் காவல் படையினா் ஈடுபட்டிருந்தனா்.