கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

1,065 சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 75.28 கோடி தொழிற்கடன் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில், 1065 தொழில் நிறுவனங்களுக்கு அரசு மானியத்துடன் ரூ. 75.28 கோடியில் தொழிற்கடன்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில் முனைவோா் ஒருவருக்கு தொழிற்கடன் வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

Updated On :3 அக்டோபர் 2024, 9:51 pm

Din

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில், 1065 தொழில் நிறுவனங்களுக்கு அரசு மானியத்துடன் ரூ. 75.28 கோடியில் தொழிற்கடன்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இதற்கான விழாவுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா, இந்தத் தொழிற்கடன்களை வழங்கினாா். தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டம், பிரதமரின் வேலை உருவாக்கும் திட்டம், அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம், மகளிா் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் இந்தக் கடன்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், மகளிா் திட்ட இயக்குநா் கே. ஸ்ருதி, மாவட்ட தொழில் மையப் பொதுமேலாளா் சு. திரிபுரசுந்தரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் த. நந்தகுமாா், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் தனலட்சுமி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தொடா்ந்து மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மேம்படுத்துதல் தொடா்பான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.