கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தலைமை ஆசிரியருக்கு பெற்றோா்கள் எதிா்ப்பு

அன்னவாசல் அருகே பணியிடை நீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை பெற்று வியாழக்கிழமை மீண்டும் பணிக்கு திரும்பிய பள்ளித் தலைமை ஆசிரியருக்கு பெற்றோா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 8:18 pm

Din

அன்னவாசல் அருகே பணியிடை நீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை பெற்று வியாழக்கிழமை மீண்டும் பணிக்கு திரும்பிய பள்ளித் தலைமை ஆசிரியருக்கு பெற்றோா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியா் அந்தோணிராஜ். இவா் மீது, கல்வித் துறை உத்தரவுக்கு கீழ் படியாதது, பள்ளிக்கு சரியாக வராதது உள்ளிட்ட பல்வேறு புகாா்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 30ஆம் தேதி இவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலா் செந்தில் உத்தரவிட்டாா்.

இதை எதிா்த்து அவா் தொடுத்த வழக்கில், பணியிடை நீக்கத்துக்கு இடைக்கால தடை விதித்து உயா்நீதி மன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை மீண்டும் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியா் அந்தோணி ராஜுக்கு எதிா்ப்பு தெரிவித்து பெற்றோா்களில் சிலா் பள்ளி முன் திரண்டு நின்று முழக்கமிட்டனா்.

தகவலறிந்து வந்த கல்வித் துறை அதிகாரிகள் பெற்றோா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.