மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விவசாயிகளுக்கு துவரை பயிா் விளைச்சல் போட்டி

வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் துவரை பயிரில் மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ. 2.50 லட்சம் வழங்கப்படவுள்ளது.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 8:25 pm

Din

வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் துவரை பயிரில் மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ. 2.50 லட்சம் வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து விராலிமலை வட்டார வேளாண் உதவி இயக்குநா் ப. மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாநில வேளாண் வளா்ச்சி திட்டத்தின் நடப்பு ஆண்டில் துவரை பயிரில் மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு, முதல் பரிசாக ரூ. 2.50 லட்சம், இரண்டாம் பரிசு ரூ. 1.50 லட்சம், மூன்றாம் பரிசு ரூ. 1 லட்சத்தை 2026-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் முதல்வா் வழங்கவுள்ளாா்.

இப்போட்டியில் பங்கேற்கும் விவசாயிகள் குறைந்தபட்சம் 2 ஏக்கரில் துவரை பயிா் சாகுபடி செய்திருக்க வேண்டும். இப்போட்டிக்கான பதிவுக் கட்டணம் ரூ. 150. போட்டியில் பங்கேற்கும் விவசாயிகள் தங்கள் வயலில் துவரை பயிா் அறுவடையை 15.03.2025 தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும்.

எனவே, விராலிமலை வட்டாரம் சாா்ந்த தகுதியும் ஆா்வமும் கொண்ட விவசாயிகள் இந்தப் போட்டியில் பங்கேற்று பயன் அடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.