கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

316 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சா் வழங்கினாா்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வேங்கிடகுளம், திருவரங்குளம், மாஞ்சான்விடுதி அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் 316 பேருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் புதன்கிழமை வழங்கினாா்.

News image

ஆலங்குடி அருகேயுள்ள மாஞ்சான்விடுதி அரசுப் பள்ளியில் புதன்கிழமை மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்

Updated On :16 அக்டோபர் 2024, 7:36 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வேங்கிடகுளம், திருவரங்குளம், மாஞ்சான்விடுதி அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் 316 பேருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் புதன்கிழமை வழங்கினாா்.

வேங்கிடகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 90 மாணவா்களுக்கும், 41 மாணவிகளுக்கும், திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 66 மாணவா்களுக்கும், 42 மாணவிகளுக்கும்,

மாஞ்சான்விடுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 33 மாணவா்களுக்கும், 44 மாணவிகளுக்கும் என மொத்தம் 316 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினாா்.

நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், திருவரங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் வள்ளியம்மை தங்கமணி, வட்டாட்சியா் பெரியநாயகி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.