ஆதரவற்ற பெண்கள் சுயதொழில் செய்ய அரசு மானியம்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் சுயதொழில் செய்வதற்காக அரசு மானியம் ரூ. 50 ஆயிரம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்துள்ளாா்.
Published on

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் சுயதொழில் செய்வதற்காக அரசு மானியம் ரூ. 50 ஆயிரம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு கைம்பெண் ம ற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தின் மூலம், நடமாடும் உணவகம், பழங்கள்- காய்கறிகள் வியாபாரம், பழச்சாறு கடை, சலவைக் கடை வைத்துக் கொள்வதற்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது.

25 முதல் 45 வயதுக்குள்பட்ட கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1.20 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கைம்பெண் சான்று, வருமானச் சான்று, குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், வசிப்பிட முகவரிக்கான சான்று ஆகியவற்றுடன், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com