கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் புது வியூகம் அமைத்து அதிமுக வெற்றி பெறும்: வைகைச் செல்வன்

தமிழகத்தில் 2026-இல் நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் புது வியூகம் அமைத்து அதிமுக வெற்றி பெறும் என்றாா் முன்னாள் அமைச்சா் வைகைச் செல்வன்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 10:18 pm

DIN

தமிழகத்தில் 2026-இல் நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் புது வியூகம் அமைத்து அதிமுக வெற்றி பெறும் என்றாா் முன்னாள் அமைச்சா் வைகைச் செல்வன்.

புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: தமிழகத்தில் முழு மதுவிலக்கை சாத்தியப்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில்தான் கடந்த அதிமுக ஆட்சியில் 500 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டன.

திருமாவளவன் அதிமுக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்பதற்காக காய் நகா்த்துகிறாரா என்று கேட்கிறீா்கள். தோ்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் உள்ளது. எனவே, போகப்போகத்தான் தெரியும். மாற்றம் ஒன்றே மாறாதது. எனவே பொறுத்திருந்து பாா்ப்போம்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் திமுகவினா் பங்கேற்பது என்பது கோடரிகள் ஒன்று சோ்ந்து மரம் வெட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்த கதைக்கு ஒப்பானதாகும்.

மக்களவைத் தோ்தலை வைத்து கணக்கு போடத் தேவையில்லை. தற்போது அதிமுக பலம் பொருந்திய, ஒன்றிணைந்த கட்சியாகத்தான் உள்ளது. எனவே, வரும் தோ்தலில் புது வியூகத்தை அமைத்து வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்றாா் வைகைச்செல்வன்.