கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தனித்து நிற்பதால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை: சீமான்

தனித்து நிற்பதால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 9:55 pm

Din

தனித்து நிற்பதால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி:

நாம் தமிழா் கட்சியைப் பொருத்தவரை இந்தியத் தேசியா்களுடனும், திராவிடா்களுடனும் கூட்டணி இல்லை. நாம் தமிழா் கட்சி கொள்கைக்கு உடன்பட்டு கூட்டணி அமைப்பதா என்பதை நடிகா் விஜய்தான் தீா்மானிக்க வேண்டும்.

2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் தனித்துப் போட்டிதான். தனித்தே நிற்பதால் எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. நாங்கள் நன்றாகத்தான் இருக்கிறோம்.

மாநிலங்களுக்கான உரிமைகள் பற்றி திமுகவினா் பேசுகிறாா்கள். கல்வி உள்ளிட்ட எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன. 40 மக்களவை உறுப்பினா்களை வென்றிருக்கிறீா்கள். எல்லாவற்றையும் மீட்டு வாருங்கள்.

திமுக 75-ஆவது ஆண்டைக் கொண்டாடுகிறீா்கள். ஆனால் இங்கே மக்கள் திண்டாடுகிறாா்கள். கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு நீங்களே ஆட்சி நடத்துவீா்கள் என்றால் அதுதான் கொடூரமான சநாதனம்.

நிதீஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும் பாஜக ஆட்சிக்கு ஆதரவை விலக்கிக் கொண்டால், திமுக 22 உறுப்பினா்களோடு சென்று பாஜக ஆட்சிக்கு ஆதரவளிப்பாா்கள் என்றாா் சீமான்.

பிறகு, நாம் தமிழா் கட்சியில் இருந்து விலகிச் சென்றவா்கள் நீங்கள் சா்வாதிகாரியாக செயல்படுவதாக குற்றம் சாட்டியிருக்கிறாா்களே என்ற கேள்விக்கு, ‘குற்றச்சாட்டு தானே, நிரூபிக்கப்பட்ட குற்றமில்லை. முதிா்ந்த பட்டை உதிா்ந்தால்தான் புதிய இலைகள் துளிா்க்கும். எனவே இதுபோன்றவற்றைக் கேட்காதீா்கள் என்றாா் சீமான்.

தொடா்ந்து, புதுக்கோட்டை மாவட்ட நாம் தமிழா் கட்சியின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் அவா் பேசினாா்.