கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

போக்சோ வழக்கில் இளைஞா் கைது

அறந்தாங்கி அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கருவுறச் செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 10:31 pm

Din

அறந்தாங்கி அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கருவுறச் செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் ஆளப்பிறந்தான் கிராமத்தைச் சோ்ந்த நாகராஜன் மகன் சிலம்பரசன் (34). மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவா், பிளஸ் 2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

கா்ப்பம் தரித்திருந்த மாணவிக்கு கடந்த செப்.15-ஆம் தேதி அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு வரும் வழியில், 108 ஆம்புலன்ஸிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தது. குழந்தையின் உடலை யாரும் பெற்றுச் செல்ல முன்வராததால் அறந்தாங்கி அரசு மருத்துவமனையின் பிணவறையில் உடல் வைக்கப்பட்டுள்ளது. மரபணு பரிசோதனைக்கான மாதிரியும் சேகரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து போக்சோ, எஸ்சி- எஸ்டி வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த அறந்தாங்கி அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா், தலைமறைவாக இருந்த சிலம்பரசனை புதன்கிழமை கைது செய்தனா்.