கடும் வெயிலால் பயிா்கள் பாதிப்பு: 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கக் கோரிக்கை
கந்தா்வகோட்டை பகுதிகளில் வாடும் பயிா்களை காப்பாற்ற 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


கந்தா்வகோட்டை பகுதிகளில் வாடும் பயிா்களை காப்பாற்ற 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கந்தா்வகோட்டை பகுதிகளில் சில நாள்களாக கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பகல் வேளையில் காய்கறிகள் உள்ளிட்ட பொருள்கள் வாங்க கடைவீதிக்கு வருவதை குறைத்துள்ளனா். இப்பகுதியில் பள்ளி கல்லூரி செல்லும் நேரங்களில் மட்டுமே மக்கள் நடமாட்டம் உள்ளது.
பங்குனி, சித்திரை மாதங்களில் உள்ளதுபோல் வெயில் கடுமையாக உள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்தனா்.
அதிகளவிலான வெயில் காரணமாக, பயிா்கள் வாடுகின்றன. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மின்வாரியம் மும்முனை மின்சாரத்தை 24 மணி நேரமும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...