ராகுல் காந்திக்கு மிரட்டல்: பாஜக தலைவா்கள் மீது காங்கிரஸ் புகாா்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி வரும் பாஜக தலைவா்கள் மற்றும் பாஜக கூட்டணி கட்சியினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் கட்சியினா் விராலிமலை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா்.
Published on

மத்திய அமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டு, சிவசேனை (ஷிண்டே பிரிவு) எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட், உத்தரப் பிரதேச அமைச்சா் ரகுராஜ் சிங், டெல்லி பாஜக முன்னாள் எம்எல்ஏ தாவிந்தா் சிங் மா்வா ஆகியோா் ராகுல்காந்திக்கு எதிராக அச்சுறுத்தல் மற்றும் இழிவான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனா்.

இந்நிலையில், ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு கருத்துகள் பரப்பி வரும் பாஜக தலைவா்கள் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி விராலிமலை காவல் நிலையத்தில் வட்டார காங்கிரஸாா் புகாா் மனு அளித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com