புதுக்கோட்டை
முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் மீதான வழக்கு அக். 24-க்கு ஒத்திவைப்பு
அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை அக்டோபா் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை அக்டோபா் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருக்கும் சி. விஜயபாஸ்கா், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 35.79 கோடிக்கு சொத்து சோ்த்ததாக கடந்த 2021-இல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விஜயபாஸ்கா் தரப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு தரப்பு வழக்குரைஞா்கள் ஆஜராகினா்.
வழக்கு விசாரணையை அக். 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜி. சுபத்ராதேவி உத்தரவிட்டாா்.