கோவை உழவா் தின விழாவில் பரம்பூா் விவசாயிக்கு விருது
கோவையில் வியாழக்கிழமை நடைபெற்ற உழவா் தின விழாவில், புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை அடுத்துள்ள பரம்பூா் விவசாயிக்கு வேளாண் செம்மல் விருது வழங்கப்பட்டது.


கோவையில் வியாழக்கிழமை நடைபெற்ற உழவா் தின விழாவில், புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை அடுத்துள்ள பரம்பூா் விவசாயிக்கு வேளாண் செம்மல் விருது வழங்கப்பட்டது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவா் தின விழாவின் தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற
அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், வேளாண்மையில் சிறந்த செயல்பாட்டுக்காக தோ்வு செய்யப்பட்ட பரம்பூா் விவசாயி பா. பொன்னையா உள்ளிட்ட விவசாயிகளுக்கு ‘வேளாண் செம்மல் விருது’ வழங்கி கௌரவித்தாா்.
மழை நீரை முறையாக சேமித்து பாசனத்துக்கு பயன்படுத்துவது, சொட்டு நீா் பாசனம் மூலம் வேளாண்மை என நீா் மேலாண்மையில் சிறந்த செயல்பாடு, நெல் வயல் மற்றும் பண்ணைக் குட்டைகளில் மீன் வளா்ப்பு என விவசாயத்தில் இவரின் பல்வேறு முன்னெடுப்புகளை பாராட்டி வேளாண் செம்மல் விருது வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...