கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரண தொகுப்புகள்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 கிராம ஊராட்சிகளுக்கும் கலைஞா் விளையாட்டுப் பயிற்சிக்கான உபகரணங்களின் தொகுப்புகள் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

News image

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளுக்கான கலைஞா் விளையாட்டுப் பயிற்சி உபகரணங்களின் தொகுப்புகளை வியாழக்கிழமை கொடியசைத்து அனுப்பி வைத்த மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி

Updated On :26 செப்டம்பர் 2024, 10:42 pm

Din

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 கிராம ஊராட்சிகளுக்கும் கலைஞா் விளையாட்டுப் பயிற்சிக்கான உபகரணங்களின் தொகுப்புகள் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

புதுக்கோட்டை மன்னா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா்.

மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, 497 ஊராட்சிகளுக்கான, 608 தொகுப்புகளை கொடியசைத்து அனுப்பி வைத்தாா்.

33 விளையாட்டுகளுக்கான உபகரணங்களைக் கொண்ட இந்தத் தொகுப்பு ஊராட்சி அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் பொறுப்பில் வைக்கப்படும். ஊராட்சி மன்றத்தில் இடவசதி இருந்தாலோ, அங்குள்ள அரசுப் பள்ளியில் இடவசதி இருந்தாலோ இவை அங்கே வைக்கப்பட்டு கிராம இளைஞா்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டு பராமரிக்கப்படும்.

மேலும், முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், மாற்றுத் திறனாளிகள் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு ரொக்கப் பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மூத்த வழக்குரைஞா் கே.கே. செல்லப்பாண்டியன், மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் து. செந்தில்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், கல்லூரி முதல்வா் பா. புவனேஸ்வரி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.