புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் தின விழாவில், மோட்டாா் பொருத்தப்பட்ட வாகனங்களை வழங்கிய மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் தின விழாவில், மோட்டாா் பொருத்தப்பட்ட வாகனங்களை வழங்கிய மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 22.46 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

Published on

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் தின விழாவில், மொத்தம் 84 பயனாளிகளுக்கு ரூ. 22.46 லட்சம் மதிப்புள்ள நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி இந்த நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா்.

4 பேருக்கு தாலிக்கு தங்கத்துடன் கூடிய திருமண உதவித் தொகை, 8 பேருக்கு தையல் இயந்திரங்கள், 66 பேருக்கு திறன்பேசிகள், 6 பேருக்கு பேட்டரி பொருத்தப்பட்ட வாகனங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டிய விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. பழைய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய இந்தப் பேரணி, நிகழ்ச்சி நடைபெற்ற ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் முடிவடைந்தது.

நிகழ்ச்சிகளில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ப. புவனா, மாநகராட்சி ஆணையா் த. நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com