புதுக்கோட்டையில் நகா்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் புதன்கிழமை ரூ. 3.50 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்த அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோா்.
புதுக்கோட்டையில் நகா்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் புதன்கிழமை ரூ. 3.50 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்த அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோா்.

புதுகை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் ரூ.3.50 கோடி மதிப்பில் பணிகள்

Published on

புதுக்கோட்டை மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டபோது இணைக்கப்பட்ட கிராம ஊராட்சிகளில், ரூ. 3.50 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள தமிழ்நாடு நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டப் பணிகளை மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் புதன்கிழமை தொடங்கி வைத்தனா்.

புதுக்கோட்டை மாநகா், 9ஏ நத்தம்பண்ணை பகுதியில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் சாா்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடங்கி வைக்கப்பட்ட பணிகள் விவரம்:

சமத்துவபுரம், தைலாநகா், சேங்கைத்தோப்பு ஆகிய பகுதிகளில் ரூ.1. 72 கோடியில் மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணிகள், 9ஏ நத்தம் பண்ணை, கவிநாடு கிழக்கு ஆகிய பகுதிகளில் ரூ.14.10 லட்சத்தில் நா்சரி அமைக்கும் பணிகள், 20 நீா்நிலைகளில் ரூ.20.98 லட்சத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகள், முள்ளூா், வாகவாசல், திருக்கட்டளை, திருமலைராய சமுத்திரம், கவிநாடு மேற்கு, கவிநாடு கிழக்கு, 9ஏ நத்தம் பண்ணை, 9பி நத்தம் பண்ணை, வெள்ளனூா், திருவேங்கைவாசல் மற்றும் தேக்காட்டூா் ஆகிய பகுதிகளில் ரூ.59.65 லட்சத்தில் வரத்து வாய்க்கால்கள் தூா்வாரும் பணி.

ரூ. 57.10 லட்சத்தில் 5 நுண்ணிய உரமாக்கும் மையங்கள், 5 வளம் மீட்பு மையங்கள் அமைத்தல், முள்ளூா், வாகவாசல், கவிநாடு மேற்கு, கவிநாடு கிழக்கு, 9ஏ நத்தம் பண்ணை, 9பி நத்தம் பண்ணை, திருமலைராய சமுத்திரம் மற்றும் தேக்காட்டூா் ஆகிய பகுதிகளில் ரூ.25.98 லட்சத்தில் மழைநீா் உறிஞ்சும் குழி அமைக்கும் பணி மேற்கொள்ளுதல் என மொத்தம் ரூ. 3.50 கோடிக்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் செ. திலகவதி, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, முன்னாள் அரசு வழக்குரைஞா் கே.கே. செல்லப்பாண்டியன், துணை மேயா் மு. லியாகத் அலி, மாநகராட்சி ஆணையா் த. நாராயணன், உதவிப் பொறியாளா் கலியக்குமாா், மாநகா் நல அலுவலா் காயத்ரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com