புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியைத் தொடங்கி வைத்த சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமாா்.
புதுக்கோட்டை
தலைக்கவசம் அவசியம் விழிப்புணா்வு வாகனப் பேரணி
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சாா்பில் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சாா்பில் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய இப்பேரணியை, சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமாா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இந்தப் பேரணி அண்ணாசிலை, கீழராஜவீதி, பிருந்தாவனம், வடக்கு ராஜவீதி, மேலராஜவீதி வழியாக மீண்டும் நீதிமன்ற வளாகத்தில் நிறைவடைந்தது.
தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மு. அருணா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
மேலும், நீதிமன்ற வளாகத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வுக்காக மரக்கன்றுகளும் நடப்பட்டன. நிகழ்ச்சிகளில் வழக்குரைஞா்கள், சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு சங்க நிா்வாகிகளும் கலந்து கொண்டனா்.

