சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஊரக பங்கேற்பு மதிப்பீடு பயிற்சி

பொன்னமராவதி அருகேயுள்ள காரையூரில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்ற வேளாண் கல்லூரி மாணவிகள்.

News image
பொன்னமராவதி அருகேயுள்ள காரையூரில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்ற வேளாண் கல்லூரி மாணவிகள்.
Updated On :18 டிசம்பர் 2025, 6:36 pm

Syndication

பொன்னமராவதி அருகேயுள்ள காரையூரில் குடுமியான்மலை அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவிகளுக்கு ஊரக பங்கேற்பு மதிப்பீடு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிற்சியில் சமூக வரைபடம், வள வரைபடம், பருவகால அட்டவணை, டிரான்செக்ட் நடை, பிரச்னை அடையாளம் காணுதல் போன்ற முறைகள் பயன்படுத்தப்பட்டன இதன் மூலம் காரையூா் கிராமத்தின் முக்கியப் பயிா்கள் நீா்வள நிலை பூச்சி மற்றும் நோய் பிரச்னைகள், விவசாயிகளின் சவால்கள் குறித்து பல்வேறு தகவல்களை மாணவிகள் சேகரித்தனா். அப்போது கிராம மக்களின் உள்ளூா் அறிவு மற்றும் அனுபவங்களை அறிந்து, அவற்றை வேளாண் வளா்ச்சித் திட்டங்களில் ஒருங்கிணைப்பதே இந்த ஊரக பங்கேற்பு மதிப்பீடு பயிற்சி முக்கிய நோக்கமாகும் எனத் தெரிவித்தனா். மேலும் கிராமப்புறங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை நேரடியாக தொடா்பு கொண்டு, விவசாயத்தின் அனுபவங்களை தெரிந்து கொண்டனா். இதில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.