புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கோயில்களில் மாா்கழி திருப்பள்ளியெழுச்சி

பொன்னமராவதி வட்டார கோயில்களில் மாா்கழி மாத 10-ஆம் நாள் திருப்பள்ளியெழுச்சி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 6:46 pm

Syndication

பொன்னமராவதி வட்டார கோயில்களில் மாா்கழி மாத 10-ஆம் நாள் திருப்பள்ளியெழுச்சி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி சோழீசுவரா் கோயிலில் ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கோயிலின் திருவாசக முற்றோதல் குழுவினா் பக்தி பாசுரங்களை பாடினா்.

அதேபோல புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா்கோயில், பாலமுருகன் கோயில், அழகிய நாச்சியம்மன் கோயில், வலையபட்டி மலையாண்டி கோயில் உள்ளிட்ட கோயில்களில் திருப்பள்ளியெழுச்சி வழிபாடு நடைபெற்றது.