விராலிமலை பேருந்து நிலையம் அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா தலைமையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற காவல்துறையினரின் அணிவகுப்பு.
விராலிமலை பேருந்து நிலையம் அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா தலைமையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற காவல்துறையினரின் அணிவகுப்பு.

விராலிமலையில் காவல் துறையினா் அணிவகுப்பு

விராலிமலை பேருந்து நிலையம் அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா தலைமையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற காவல்துறையினரின் அணிவகுப்பு.
Published on

விராலிமலையில் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா தலைமையிலான போலீஸாா் பண்டிகை கால இரவு ரோந்து பணியை குறிக்கும் விதமாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அணிவகுப்பு நடத்தி பாதுகாப்புடன் பொதுமக்கள் பண்டிகையை கொண்டாடலாம் என்று வெளிப்படுத்தும் விதமாக அணிவகுப்பு நடத்தினா்.

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு, அமைதி மற்றும் சட்டம்-ஒழுங்கை உறுதி செய்ய, போலீஸாா் முக்கிய இடங்களில் அணிவகுப்பு நடத்துவது வழக்கம். அதன்படி தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (ஜன.15) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை அடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணா்வை ஏற்படுத்தவும், பொங்கல் பண்டிகைக் காலத்தில் மக்கள் சொந்த ஊா் செல்வதால், பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள் அச்சம் இல்லாத பயணத்தை மேற்கொள்ளவும் அந்தப் பகுதிகளில் இரவு ரோந்து பணிகளை அதிகரிக்கும் விதமாகவும் இந்த போலீஸாா் அணிவகுப்பு நடைபெற்றது.

மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா தலைமையில் நள்ளிரவு நடைபெற்ற இந்த அணிவகுப்பில் காவல் துணைக் கண்காணிப்பாளா் திவ்யா, காவல் ஆய்வாளா்கள் லதா (விராலிமலை), சந்திரசேகரன் (அன்னவாசல்), கலா (இலுப்பூா்), காவல் உதவி ஆய்வாளா் பிரகாஷ்(விராலிமலை) மற்றும் காவலா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

பின்னா் செய்தியாளா்களை சந்தித்த எஸ்.பி. அபிஷேக் குப்தா: இது போன்ற பண்டிகை காலங்களில் அணிவகுப்பு நடத்தி ரோந்து செல்வதை போலீஸாா் உறுதிபடுத்தும்போது குற்ற சம்பவங்கள் தடுக்கப்படுகின்றன. மேலும், பொது மக்களுக்கும் காவலா்களுக்கும் நல்ல ஒரு உறவு மேம்படுகிறது. தினமும் வாகன சோதனையை தீவிர படுத்தவும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிர படுத்தியுள்ளோம். இதன் மூலம் குற்றங்கள் தடுக்கப்பட்டு குற்றவாளிகளை எளிதில் கண்டறிய முடியும் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com