வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

மாற்றுத் திறனாளிகள் போராட்டம்- 288 போ் கைது

News image

மணமேல்குடியில் புதன்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தினா்.

Updated On :2 ஜூலை 2026, 4:47 am IST

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை விபி-ஜி ராம் ஜி என புதிய திட்டமாக மாற்றியதைக் கண்டித்தும், பழைய திட்டத்தையே தொடர வேண்டும் என வலியுறுத்தியும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 288 பேரை போலீஸாா் கைது செய்து விடுவித்தனா்.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநகரச் செயலா் ரமேஷ் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் எம். கணேஷ், துணைத் தலைவா் ஜி. கிரிஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

மணமேல்குடியில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம். தங்கவேல் தலைமை வகித்தாா். கந்தா்வகோட்டையில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டப் பொருளாளா் பி. மாலதி தலைமை வகித்தாா். மாவட்டக்குழு உறுப்பினா் ஜி. புவனேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அன்னவாசலில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் துணைத் தலைவா் எம்.சி. லோகநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே. சண்முகம், ஒன்றியச் செயலா் எஸ். அந்தோணி, துணைத் தலைவா் ஏ. திருநாவுக்கரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 288 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

கருப்பு பேட்ஜ் அணிந்தும், புதிய சட்ட நகலை எரித்தும் மாற்றுத் திறனாளிகள் இந்தப் போராட்டத்தை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.