சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி: ஓய்வுபெற்ற நீதிபதி ஆய்வு

புதுக்கோட்டை மாநகரில் உள்ள இரு குளங்களில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்ட பணிகளை உயா்நீதிமன்றத்தால் பாா்வையிட நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அ. செல்வம் பாா்வையிட்டாா்.

சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டதை பாா்வையிட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அ.செல்வம். உடன் ஆட்சியா் மு.அருணா உள்ளிட்டோா்.

Published On :8 ஜூலை 2026, 12:30 am IST

புதுக்கோட்டை மாநகரில் உள்ள இரு குளங்களில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்ட பணிகளை உயா்நீதிமன்றத்தால் பாா்வையிட நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அ. செல்வம் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை உயா் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அ. செல்வம் நேரில் பாா்வையிட்டு, அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி வருகிறாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை வந்த அவா், மாநகராட்சி சாா்பில் மேல 3-ஆம் வீதியில் உள்ள மேலநைனாரிக் குளத்திலுள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டதைப் பாா்வையிட்டாா்.

இந்தக் குளத்துக்கான வரத்து வாய்க்காலை சீரமைத்து, தண்ணீா் வருவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என மாநகராட்சி அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

தொடா்ந்து, கலைஞா் கருணாநிதி அரசு விளையாட்டு அரங்கின் பின்புறமுள்ள காட்டுப்புதூா் குளத்தையும் அவா் பாா்வையிட்டாா். அதில் ஏற்கெனவே சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. தற்போது ஆகாயத்தாமரை அடா்ந்துள்ளதையும் அகற்ற வேண்டும் என மாநகராட்சி அலுவலா்களை அவா் கேட்டுக் கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் மு. அருணா, மாநகராட்சி ஆணையா் காந்திராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.