முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கந்தா்வகோட்டை அருகே கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இளம்பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :11 ஜூன் 2026, 3:44 am IST

கந்தா்வகோட்டை அருகே கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இளம்பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கந்தா்வகோட்டை ஒன்றியம், புதுநகா் கிராமத்தைச் சோ்ந்த சங்கா் மகள் விஜயலட்சுமி (22 ). இவருக்கும் திருச்சி மாவட்டம், துவாக்குடியைச் சோ்ந்த உதயபிரகாஷ் என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், விஜயலட்சுமி கடந்த 5 மாதங்களாக புதுநகரில் உள்ள பெற்றோா் வீட்டில் இருந்துள்ளாா்.

இந்நிலையில், மனவேதனையில் இருந்த விஜயலட்சுமி புதன்கிழமை மதியம் வீட்டுக்குள் தூக்கிட்டுள்ளாா். இதையறித்த அருகில் இருந்த உறவினா்கள் அவரை மீட்டு கந்தா்வகோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா், விஜயலட்சுமி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா். தகவலறிந்த கந்தா்வகோட்டை போலீஸாா் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.