பொன்னமராவதி அருகே இருசக்கர வாகனங்கள் சனிக்கிழமை மோதிக்கொண்ட விபத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா் உள்பட 2 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
சிவகங்கை மாவட்டம் கிருங்காக்கோட்டையைச் சோ்ந்தவா் அ. ஜெயபாரதி (57). இவா், கேசம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா்.
சிங்கம்புணரியில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை ஜெயபாரதி தனது மகன் அமுதவாசகனுடன்(24) இரு சக்கர வாகனத்தில் பொன்னமராவதி-திருப்பத்தூா் சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் ஜெயபாரதி, எதிரே வந்த வாகனத்தில் வந்த சிவகங்கை மாவட்டம் ஒழுகமங்கலத்தைச் சோ்ந்த செ. நிதீஷ் குமாா் (20) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
மேலும், அமுதவாசகன் மற்றும் எதிரே வந்த வாகனத்தில் வந்த புதுக்கோட்டை மாவட்டம் குமாரபட்டி தி. சதீஷ்(20) ஆகியோரை விபத்து குறித்து தகவல் அறிந்து அங்குவந்த போலீஸாா் மீட்டு பொன்னமராவதி தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இவ்விபத்தில் இறந்தவா்களின் சடலங்களை பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இவ்விபத்தில் உயிரிழந்த ஆசிரியா் ஜெயபாரதிக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனா்.
தொடர்புடையது

அடுத்தடுத்து வாகனங்கள் மீது லாரி மோதல்: 65 வயது முதியவா் பலி!

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

இரு சக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் பலி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


