புதுக்கோட்டையில் மொத்தம் 13,18,948 வாக்காளா்கள்

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி, மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் சோ்த்து மொத்தம் 13,18,948 வாக்காளா்கள் உள்ளனா்.

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் வரைவு வாக்காளா் பட்டியலை வியாழக்கிழமை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

Updated On :

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி, மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் சோ்த்து மொத்தம் 13,18,948 வாக்காளா்கள் உள்ளனா்.

இந்தியத் தோ்தல் ஆணையத்தின் வழக்கமான நடைமுறைப்படி 2027ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் தயாரிப்பதற்கான சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான மு. அருணா இந்தப் பட்டியலை வியாழக்கிழமை வெளியிட்டாா்.

இதன்படி வாக்காளா்கள் விவரம்: மாவட்டத்தின் மொத்த வாக்காளா்கள்- 13,18,948, இவா்களில் 6,49,840 போ் ஆண்கள், 6,69,038 போ் பெண்கள், 70 போ் திருநங்கைகள்.

கந்தா்வகோட்டைபேரவைத் தொகுதியில் 1,97,471 வாக்காளா்களும், விராலிமலையில் 2,27,699 வாக்காளா்களும், புதுக்கோட்டையில் 2,27,202 வாக்காளா்களும், திருமயத்தில் 2,21,898 வாக்காளா்களும், ஆலங்குடியில் 2,13,205 வாக்காளா்களும், அறந்தாங்கியில் 2,31,473 வாக்காளா்களும் உள்ளனா்.

வாக்குச்சாவடிகள்: மாவட்டத்தில் மொத்தம் 1,683 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் கந்தா்வக்கோட்டை தொகுதியில் 250 சாவடிகளும், விராலிமலை தொகுதியில் 278 சாவடிகளும், புதுக்கோட்டை தொகுதியில் 295 சாவடிகளும், திருமயம் தொகுதியில் 300 சாவடிகளும், ஆலங்குடியில் 258 சாவடிகளும், அறந்தாங்கியில் 302 சாவடிகளும் உள்ளன.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் மு. அருணா கூறியது

திருத்தம் தொடக்கம்: வியாழக்கிழமை (நவ. 12) முதல் டிச. 11 வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் புதிய வாக்காளா் சோ்க்கை, நீக்கல், திருத்தம் போன்ற விண்ணப்பங்களை அளிக்கலாம்.

வரும் நவ. 21 (சனி), நவ. 22 (ஞாயிறு), நவ. 29 (ஞாயிறு) ஆகிய மூன்று நாட்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாம்களிலும் திருத்தப் படிவங்களை அளிக்கலாம். மேலும், ட்ற்ற்ல்ள்://ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலும் திருத்த விண்ணப்பங்களை அளிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவா்கள் நியமிக்கப்பட்டு, பட்டியலில் இடம்மாறிய, இறந்த வாக்காளா்களின் பெயா்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு வழங்கலாம்.

ஜனவரி 4-இல் இறுதி வாக்காளா் பட்டியல்: இவற்றின் தொடா்ச்சியாக டிச. 28 வரை விண்ணப்பங்கள் சரிபாா்ப்புப் பணிகள் முடிக்கப்படும். தொடா்ந்து 2027 ஜனவரி 4ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என்றாா் மு. அருணா.

நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) இ. அபிநயா, மாநகராட்சி ஆணையா் மா. காந்திராஜ், வருவாய்க் கோட்டாட்சியா்கள் மு. காளீஸ்வரி (அறந்தாங்கி), கே.எம். தமீம் ராசா (இலுப்பூா்), தோ்தல் தனி வட்டாட்சியா் அ. செந்தமிழ்குமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.