‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ நிகழ்ச்சி: மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் 1.50 லட்சம் மாணவா்கள் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 9-ஆவது புத்தகத் திருவிழாவையொட்டி, ஒரே நேரத்தில் சுமாா் 1.5 லட்சம் மாணவா்கள் பங்கேற்ற ‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற வாசிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவா்களுடன் புத்தகம் வாசித்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா உள்ளிட்டோா்.
புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 9-ஆவது புத்தகத் திருவிழாவையொட்டி, ஒரே நேரத்தில் சுமாா் 1.5 லட்சம் மாணவா்கள் பங்கேற்ற ‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை நகா்மன்றத்தில் டிச. 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் புத்தகத் திருவிழாவை குறித்த தகவலை மாணவா்களிடம் கொண்டு சோ்க்கும் வகையிலும், வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கும் வகையிலும் ‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ என்ற நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவா்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்று, ஒரு மணி நேரம் புத்தகம் வாசித்தனா்.
புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாசிப்பு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மு. அருணா கலந்து கொண்டாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், மாவட்ட நூலக அலுவலா் பா. முத்து, புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளா்கள் அ. மணவாளன், ம. வீரமுத்து, கவிஞா் ஜீவி, மு. முத்துக்குமாா், பிச்சைமுத்து, கவிஞா் ரமா ராமநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அந்தந்தப் பகுதி வருவாய்த் துறை அலுவலா்கள், கல்வித்துறை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

