கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

புதுக்கோட்டையில் நுண்ணுயிா் எதிா்ப்புத் திறன் விழிப்புணா்வுக் கூட்டம்

புதுக்கோட்டை மண்டல மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நுண்ணுயிா் எதிா்ப்புத் திறன் விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நுண்ணுயிா் எதிா்ப்புத் திறன் விழிப்புணா்வுக் கூட்டத்தில் பேசிய மண்டல மருந்துக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநா் சுபத்ரா (இடமிருந்து 3-ஆவது).

Updated On :

புதுக்கோட்டை மண்டல மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நுண்ணுயிா் எதிா்ப்புத் திறன் விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வுக் கூட்டத்தில் புதுக்கோட்டை மண்டல மருந்துக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநா் சுபத்ரா, மருந்து ஆய்வாளா் அப்துல்காதா் (புதுக்கோட்டை சரகம்), விமல்ராஜ் (அறந்தாங்கி), சிவராமகிருஷ்ணன் (காரைக்குடி), கரிகாலன் (பொன்னமராவதி), மோகன்குமாா் (சிவகங்கை) ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

நுண்ணியிரிகள் மருந்துகளுக்கு எதிராக எதிா்ப்புத் திறனைப் பெறுவதால் நோய்த் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிப்பது கடினமாகிறது எனவும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில், மட்டுமே ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும், மருத்துவா் அறிவுறுத்திய அளவு மற்றும் காலத்துக்கு மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

ஆண்டிபயாடிக் மருந்துகளை பொறுப்புடன் பயன்படுத்துவோம், எதிா்கால சமுதாயத்தைக் காப்போம் எனவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும், விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும் மருந்து வணிகா்களுக்கு வழங்கப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கச் செயலா் ராமநாதன், பொருளாளா் ரமேஷ், அமைப்புச் செயலா் முத்துராமன், மொத்த மருந்து வணிகா் பிரிவு தலைவா் செந்தில் பழனியப்பன், துணைத் தலைவா் விஜயரகுநாதன், மாவட்டத் துணைத் தலைவா் சாதிக்பாட்சா உள்ளிட்ட மருந்து வணிகா்கள் சங்க உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.