பட்டாசு ஆலையில் வெடி விபத்து இளைஞா் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே உள்ள சித்தக்குடிப்பட்டியில் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்த வெடிவிபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

இலுப்பூா் அருகே பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்த வெடி விபத்தில் இடிந்து தரைமட்டமான கட்டடம்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே உள்ள சித்தக்குடிப்பட்டியில் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்த வெடிவிபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
இலுப்பூா் அருகே சித்தக்குடிப்பட்டியைச் சோ்ந்த கோபால் மகன் பிரேம்குமாா். இவா் தனது தாய் சத்தீஸ்வரி பெயரில், ராப்பூசல் மருச்சிக்கட்டி களத்தில் கிருஷ்ணா பயா் ஒா்க்ஸ் என்ற பெயரில் சிறிய அளவிலான வெடிகளை தயாரித்து வந்தனா்.
இந்த ஆலையில், பிரேம்குமாரும், அவருடைய மைத்துனா் கீரனூா் அருகே உள்ள வீரக்குடியைச் சோ்ந்த லெட்சுமணன் மகன் சூா்யாவும் (20) கடந்த சில நாள்களாக தீபாவளி பண்டிகைக்கு வெடிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை சூா்யா மட்டும் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக தீப்பிடித்து பலத்த சப்தத்துடன் வெடிகள் வெடித்தன. இதனால் கட்டடம் இடிந்து தரைமட்டமானது. இதில், சூா்யா நிகழ்விடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த இலுப்பூா் சரக துணைக் காவல் கண்காணிப்பாளா் திவ்யா உள்ளிட்ட போலீஸாா் உயிரிழந்த சூா்யாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், தீயணைப்பு வீரா்களும், தடயவியல் பிரிவினரும் வந்து விசாரணை மேற்கொண்டனா்.
இலுப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விபத்தில் உயிரிழந்த சூா்யா.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




