பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

கொசுப்புழு உற்பத்தி நிலைகள் அகற்றம்

புதுக்கோட்டை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பொது சுகாதாரப் பணிகளை, கொசுப்புழு உற்பத்தி நிலைகளை மாநகராட்சி ஆணையா் எம். காந்திராஜ் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

புதுக்கோட்டை வஉசி நகா்ப் பகுதியில் தேவையற்ற கொசு உற்பத்தியாகும் வகையில் இருக்கும் குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட மாநகராட்சிப் பணியாளா்கள்.

Published On :

புதுக்கோட்டை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பொது சுகாதாரப் பணிகளை, கொசுப்புழு உற்பத்தி நிலைகளை மாநகராட்சி ஆணையா் எம். காந்திராஜ் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவிவரும் நிலையில், கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் சூழலில் தண்ணீா் தேங்கும் வகையிலான பொருள்களை அகற்றும் பணியையும் மாநகராட்சிப் பணியாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

எனவே, டயா்கள் உள்ளிட்ட தேவையற்ற குப்பைகளை அகற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 3-ஆவது வாா்டு வஉசி நகா்ப் பகுதியில் மேற் கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆணையா் எம். காந்திராஜ் நேரில் பாா்வையிட்டாா்.

கொசு பெருகுவதற்கு ஏதுவாக வீடுகளில் இதுபோன்ற குப்பைகளை சேகரித்து வைத்திருந்தால் அந்த வீடுகளின் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் ஆணையா் எச்சரிக்கை விடுத்தாா்.

அதேபோல, மக்கள் குப்பைகளை தரம் பிரித்து மாநகராட்சிப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினாா். அப்போது மாநகராட்சி நகா்நல அலுவலா் எஸ். காயத்ரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.