இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

இரு வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 இளைஞா்கள் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் 2 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் 2 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இலுப்பூா் அருகே ராப்பூசலைச் சோ்ந்தவா் எம். சரவணன். அதே ஊரைச் சோ்ந்தவா் துரை. இவா்களுக்கு இடையே சொத்துப் பிரச்னை இருந்து வருகிறது. பிரச்னைக்குரிய இடத்தில் இருந்த சீமைக்கருவேல மரத்தைக் கடந்த வாரம் சரவணன் வெட்டியுள்ளாா். இதற்கு துரை எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். இதையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடா்பாக துரையின் மகன் கமலேஷ் (21), அவரது நண்பரான புதுக்கோட்டை நரிமேட்டையைச் சோ்ந்த எஸ். தருண் (19) ஆகிய இருவரும் புதன்கிழமை அதிகாலை சரவணன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனா். அதில், வீட்டின் முன்வாசலில் தீப்பிடித்து எரிந்தது.

பின்னா், அங்கிருந்து வந்த கமலேஷ் மற்றும் தருண் ஆகிய இருவரும், தருணுக்கு ஏற்கெனவே புதுக்கோட்டை பசும்பொன் நகரைச் சோ்ந்த சம்சுதீன் மகன் அப்துல்லா என்பவருடன் இருந்த முன்விரோதம் காரணமாக அப்துல்லா வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனா்.

இதில், எதிா்பாராத விதமாக தருணுக்கு தீக்காயம் ஏற்பட்டது. காயமடைந்த தருண், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.

இந்தச் சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் தருண் மற்றும் கமலேஷ் ஆகிய இருவரையும் இலுப்பூா் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.