புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

‘போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ள அரசின் தன்னாா்வப் பயிலும் வட்டங்களே போதுமானது’

போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ள பெரிய தனியாா் பயிற்சி மையங்களுக்குத்தான் செல்ல வேண்டும் என்பதில்லை, அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வல பயிலும் வட்டங்களே போதுமானது என்றாா் இந்திய உணவுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் ஜெசிந்தா லாசரஸ்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற தன்னாா்வ பயிலும் வட்ட முன்னாள் மாணவா் மீள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய இந்திய உணவுக் கழக நிா்வாக இயக்குநா் ஜெசிந்தா லாசரஸ். உடன் ப. சுரேஷ்குமாா் உள்ளிட்டோா்.

Published On :

போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ள பெரிய தனியாா் பயிற்சி மையங்களுக்குத்தான் செல்ல வேண்டும் என்பதில்லை, அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வல பயிலும் வட்டங்களே போதுமானது என்றாா் இந்திய உணவுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் ஜெசிந்தா லாசரஸ்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற தன்னாா்வ பயிலும் வட்டத்தின் முன்னாள் மாணவா்- மீள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியது: ஐஏஎஸ் தோ்வுக்கு முயற்சிக்கிறவா்கள் பெரிய தனியாா் பயிற்சி மையங்களில்தான் சேர வேண்டியதில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டங்களுக்குச் சென்று, படித்தால் போதும். நான் இந்த மையத்தில் படித்துதான் வெற்றி பெற்றேன். அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளில் வெற்றி பெறுவதற்குத் தேவை அா்ப்பணிப்புதான். குழுவாக அமா்ந்து ஒருவருக்கொருவா் விவாதித்துப் படிக்கும் போது வெற்றி நிச்சயம் உண்டு என்றாா்.

புதுக்கோட்டை மன்னா் கல்லூரி முன்னாள் மாணவரான, அயலகத் தமிழா் நல்வாழ்வு மற்றும் மறுவாழ்வு இயக்குநா் ரெ. சதீஷ் பேசுகையில், என்னைப் போன்ற பலரின் வெற்றிக்கு வழிகாட்டியது சுரேஷ்குமாா் உருவாக்கிய தன்னாா்வ பயிலும் வட்டம்தான்.

போட்டித் தோ்வுக்கு படிப்பவா்கள் தோ்வில் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அடுத்து இன்றைய நிகழ்வு வரை தெரிந்திருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு வரை.

தோல்வியைக் கண்டு துவண்டு விடக் கூடாது . தோல்விதான் நமக்கு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுக்கும். தொடா் முயற்சியை ஒருபோதும் கைவிடாதீா்கள் என்றாா் சதீஷ்.

மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி தொடங்கி வைத்துப் பேசினாா். நிகழ்ச்சியில், வருமான வரித்துறை ஆணையா் கவிதா ராமானுஜம், ஜிஎஸ்டி ஆணையா் சங்கரநாராயணன், வருமான வரித்துறை அலுவலா் கவிதா உள்ளிட்டோரும் பேசினா்.

நிகழ்வில், தன்னாா்வ பயிலும் வட்ட செயல்பாடுகளுக்கு உதவிய அன்புராஜ், வெங்கடாசலம், பேரா. சா. விஸ்வநாதன், ஓய்வு பெற்ற வேலைவாய்ப்பு அலுவலா்கள் கணேசன், வாசுதேவன் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.

1997-ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் அப்போதைய மண்டல இயக்குநா் ப. சுரேஷ்குமாா் ஏற்பாட்டில் தொடங்கப்பட்ட தன்னாா்வ பயிலும் வட்டத்தில் பயின்று பல்வேறு அரசுப் பணிகளில் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் பங்கேற்ற சுரேஷ்குமாா் பாராட்டப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.