"மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரியகோயிலில் 13 ஆம் ஆண்டாக பிரகன் நாட்டியாஞ்சலி விழா மார்ச் 7-ம் தேதி தொடங்கி, மார்ச் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பிரகன் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை, தென்னகப் பண்பாட்டு மையம், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் ஆகியவை சார்பில் நடைபெறும் இந்த நாட்டிய விழாவில் 600-க்கும் அதிகமான நடனக் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில், கதக், மோகினி ஆட்டம், ஒடிசி, குச்சிப்புடி ஆகிய நடனங்கள் இடம்பெறவுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த புகழ்பெற்ற நடனக் கலைஞர்களும், பல்வேறு நாடுகளை சேர்ந்த நாட்டிய கலைஞர்களும் பங்கேற்கின்றனர்.
மேலும், புகழ் பெற்ற நடனக் கலைஞர்களான மீனாட்சி சித்தரஞ்சன், நந்தினி சுரேஷ், அர்ச்சனா பாலேக்கர், பெகன்ஸ் தோடிவாலா, பானுமதி, அனுபமா மோகன், ஸ்ரீதேவி ராஜன், வி.பி. தனஞ்செயன், கிருஷ்ணமூர்த்தி, ருக்மணி விஜயகுமார், சொர்ணலதா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
முதல் நாளான மார்ச் 7-ம் தேதி மாலை 6.15 மணிக்குத் தொடங்கி 8-ம் தேதி அதிகாலை 3.30 மணி வரை நடைபெறவுள்ள இந்த விழாவில் 15 குழுக்களின் நடனங்கள் இடம்பெறுகின்றன. மற்ற நாள்களில் மாலை 6.15 மணி முதல் இரவு 9.15 மணி வரை நடைபெறும்' என்று பிரகன் நாட்டியாஞ்சலி அறக்கட்டளைத் தலைவர் வி. வரதராஜன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாடாளுமன்றம் வருவதில் அமித் ஷாவுக்கு என்ன பிரச்னை? பயம் ஏன்? கார்கே கேள்வி!

அமித் ஷா விளக்கம் அளிக்கும் வரை நாடாளுமன்ற முடக்கம் தொடரும்: பிரியங்கா காந்தி!

தவெக அரசு சரணாகதி அடையத் தயாராக இருக்க வேண்டும்: கிருஷ்ணசாமி பேட்டி

சிறப்பான கிளைமேக்ஸ்... வினோதினி தொடர் 367 நாள்களுடன் நிறைவு!
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! பேரவையில் முதல்வர் Vijay பேச்சு! | TN Assembly | TVK


