அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பட்டுக்கோட்டையில்  நவ. 21-இல் பயிர் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம்: விவசாயிகளுக்கு அழைப்பு

பட்டுக்கோட்டையில் நவம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ள பயிர்க் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாமில் பங்கேற்குமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:12 pm

DIN

பட்டுக்கோட்டையில் நவம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ள பயிர்க் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாமில் பங்கேற்குமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து  பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஆர். கோவிந்தராசு, வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.ஈஸ்வர் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கை: 
 2017-18 ஆம் ஆண்டுக்கான பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் சம்பா நெல்லுக்கு செயல்படுத்தப்படுகிறது. இதன்படி,  நடப்பு சம்பா பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 30 ஆம் தேதி கடைசி நாள்.
1 ஏக்கர் நெற்பயிருக்கான காப்பீட்டு தொகை ரூ.26,800 ஆகும். இதற்கு விவசாயிகள் 1 ஏக்கருக்கு பிரீமியமாக ரூ. 402  மட்டும் செலுத்த வேண்டும். பிரீமியத் தொகையை விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கி, கணினி பொதுச்சேவை மையம் இவற்றில் ஏதாவது ஒன்றில் செலுத்தலாம்.  அவ்வாறு செலுத்துவதற்குத் தேவைப்படும் ஆவணங்கள் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி பாஸ்புத்தகம் ஆகியவை ஆகும். 
இவற்றில் வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் சிட்டா, அடங்கல் ஆகியவற்றை விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர்களிடமிருந்து எளிதாக பெறுவதற்காக நவ.21 ஆம் தேதி பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
எனவே, பட்டுக்கோட்டை வட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை,  மதுக்கூர், சேதுபாவாசத்திரம்,  பேராவூரணி, திருவோணம் ஆகிய வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் முகாமில் பங்கேற்று  சிட்டா, அடங்கல் ஆகியவற்றை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த முகாமிலும் பயிர்க் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையை விவசாயிகள் செலுத்தலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.