இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பொன்னாப்பூரில் டெங்கு தடுப்பு பணி: ஆட்சியர் ஆய்வு

ஒரத்தநாடு ஒன்றியத்துக்குட்பட்ட  பொன்னாப்பூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணியை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:06 am

DIN

ஒரத்தநாடு ஒன்றியத்துக்குட்பட்ட  பொன்னாப்பூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணியை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொன்னாப்பூர் ஊராட்சி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர், பொதுமக்களிடம் கொசு உற்பத்தி ஆகாத வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும், தண்ணீர் தேங்கக்கூடிய மாவரைக்கும் குடக்கல், தேங்காய் சிரட்டை, டயர்கள்,பிளாஸ்டிக் கப் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, அங்கன்வாடி மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 ஆய்வின்போது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மணி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.