நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தவறிவிழுந்த இளைஞர் சாவு
தஞ்சாவூரில் நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
பேராவூரணி அருகேயுள்ள ராவுத்தர் நைனா முகமது மகன் முகமது இன்சார் (21). பி.பி.ஏ. படித்துள்ள இவர் அக். 17-ம் தேதி தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையப் பகுதியில் தனது நண்பர் நடத்தி வரும் கடைக்குச் சென்றார். பின்னர், இரவு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். தஞ்சாவூரில் உள்ள புதுக்கோட்டை சாலையில் காவேரி நகரில் இவர் சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறிய இவர் கீழே விழுந்தார். இதில், பலத்தக் காயமடைந்த முகமது இன்சார் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
