தியாகராஜர் ஆராதனை விழாவுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி: வழக்குரைஞர் தகவல்

மெலட்டூர் பாகவத மேளா, திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா உள்ளிட்ட பழம்பெரும் நிகழ்ச்சிகளுக்கு அறிவுசார் சொத்துரிமை சட்டத்தில் பதிவு செய்யப்படும் என்றார் வழக்குரைஞர் சஞ்சய்காந்தி.
Updated on
1 min read

மெலட்டூர் பாகவத மேளா, திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா உள்ளிட்ட பழம்பெரும் நிகழ்ச்சிகளுக்கு அறிவுசார் சொத்துரிமை சட்டத்தில் பதிவு செய்யப்படும் என்றார் வழக்குரைஞர் சஞ்சய்காந்தி.
தஞ்சாவூரில் அறிவுசார் சொத்துரிமை வழக்குரைஞர் சஞ்சய்காந்தி செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: 
காஞ்சிபுரம், ஆரணி சில்க், பவானி ஜமுக்காளம், மதுரை சுங்கடிசேலை, சேலம் வெண்பட்டு வேட்டி, கோவை கோரா காட்டன் சேலை, தஞ்சை ஓவியம், வீணை, தலையாட்டி பொம்மை, மாமல்லபுரம் கற்சிற்பம், பத்தமடை பாய், நாச்சியார் கோயில் விளக்கு, தோடர் வேலைப்பாடு போன்று தமிழகத்தின் 15 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தந்துள்ளேன். மேலும் 145 சங்கங்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற்று தந்துள்ளேன்.
தமிழகத்தில் உள்ள பதிவு செய்யப்படாத புவிசார் குறியீடு பொருள்களைக் கண்டறிந்து பதிவு செய்யும் பணி செய்துள்ளேன். 
இந்த வரிசையில் ஓசூர் ரோஸ், திண்டுக்கல் பூட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம், தஞ்சை மரக்குதிரை, நெல்மாலை, திருவையாறு அசோகாஅல்வா உள்ளிட்ட பொருள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் தஞ்சை மாவட்டம் மெலட்டூர் பாகவத மேளா, திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா போன்ற பழம்பெரும் நிகழ்ச்சிகள், அய்யம்பேட்டை கரும்புவெல்லம், கும்பகோணம் வெற்றிலை, பட்டுக்கோட்டை தென்னை, தஞ்சை கடற்கரை மாவட்டத்தில் கிடைக்கும் கடற்கரை மீன்வகைகள்,  அதிராம்பட்டினம் கருவாடு 
உள்ளிட்ட பொருள்கள் விரைவில் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் பதிவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com