வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரெளடி கைது

கும்பகோணத்தில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரெளடியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
Published on

கும்பகோணத்தில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரெளடியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், செம்மஞ்சேரி சுனாமி நகரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் சக்திதரன் (எ) மணிகூண்டு சக்தி (39).  இவர் மீது பட்டீஸ்வரம், கும்பகோணம் மேற்கு, கிராமியக் காவல் நிலையங்களில் போதை பொருள் கடத்தல், சுவாமிமலை காவல் நிலையத்தில் கொலை முயற்சி ஆகிய வழக்குகள் உள்ளன.  பல்வேறு வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த மணிகூண்டு சக்தியை, கும்பகோணம் மேற்கு காவல் நிலைய தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com