கும்பகோணத்தில் நீதிபதிகளின் குடியிருப்பு முன்பு 3 பெண் குழந்தைகளுடன் தந்தை புதன்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கும்பகோணம் அருகே திருப்புறம்பியம் மேலத்தெருவை சேர்ந்த தர்மன் மகன் இளையராஜா (38). எலக்ட்ரீசியன். இவர் புதன்கிழமை கும்பகோணம் கச்சேரி சாலையில் உள்ள நீதிபதிகளின் குடியிருப்பு முன்பு திடீரென தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை கிழக்கு காவல் நிலைய பெண் போலீஸார் ஒருவர் சமாதானம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவர், போலீஸார் பொய் வழக்கு போட்டு என் வாழ்க்கையை கெடுத்துவிட்டனர் எனக் கூறி, போலீஸாருக்கு எதிராக கோஷமிட்டு, எனக்கு ஒரு நல்ல தீர்ப்பை தாருங்கள் என நீதிபதிகளின் வீடுகளுக்குள் செல்ல முயன்றும், கருங்கல்லை எடுத்து தலையில் போட்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றார். இளையராஜாவின் செயலை கண்டு அவரது குழந்தைகளும் கதறி அழுதன.
இதுகுறித்து இளையராஜா கூறியது:
எலக்ட்ரீசியனான எனக்கு சரிதா என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். என் மீது கும்பகோணம் கிழக்கு போலீஸார் பொய் வழக்கு பதிந்து, 6 மாதம் சிறையில் அடைத்தனர். தற்போது நான் ஜாமீனில் வெளியே வந்துள்ளேன்.
இந்நிலையில் என் மனைவி என்னையும், குழந்தைகளையும் விட்டுவிட்டு செவ்வாய்க்கிழமை வேறொருவருடன் சென்றுவிட்டார்.
தற்போது நான் என்னுடைய குழந்தைகளை வைத்துக் கொண்டு அவதிப்படுகிறேன். எனது குடும்பத்தை பிரித்தது போலீஸ்தான். இதற்கு நீதிபதிகள் தான் தீர்வு வழங்க வேண்டும் என்றார்.
அப்போது அங்கு வந்த கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மகாதேவன், இளையராஜாவையும், அவரது குழந்தைகளையும் வேனில் அழைத்து சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




