
தஞ்சாவூர் அருகே கல்லணைக் கால்வாயில் புதன்கிழமை குளிக்கச் சென்ற இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி ஆடக்காரத் தெருவைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (23). இவர் தஞ்சாவூரில் உள்ள மின்னணு சாதனங்கள் விற்பனை நிலையத்தில் விற்பனை பிரதிநிதியாகப் பணியாற்றி வந்தார்.
இவர் விளார் புறவழிச்சாலையில் வெட்டிக்காடு பாலம் அருகே கல்லணைக் கால்வாயில் புதன்கிழமை குளிக்கச் சென்றார். பாலத்தில் இருந்து குதித்து, நீச்சல் அடித்துக் கொண்டிருந்த இவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
தகவலறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலைத் தேடினர். பின்னர், நெய்வாய்க்கால் கரையோரம் ஒதுங்கிய ஸ்டீபன் ராஜ் சடலம் மீட்கப்பட்டது.
இதுகுறித்து தாலுகா போலீஸார் விசாரித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





