தஞ்சாவூரில் தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி மெளன ஊர்வலம் மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் காந்திஜி சாலை ஆற்றுப்பாலம் அருகேயுள்ள பெரியார் தூண் பகுதியில் இருந்து பல்வேறு கட்சிகள் சார்பில் ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியார் சிலை முன் முடிவடைந்தது.
பின்னர், பெரியார் சிலைக்கு திராவிடர் கழகம் சார்பில் மண்டலச் செயலர் மு. அய்யனார் தலைமையில் பொதுச் செயலர் இரா. ஜெயக்குமார் மாலை அணிவித்தார். இதில், அமைப்புச் செயலர் இரா. குணசேகரன், மாநகரச் செயலர் சு. முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் துணைவேந்தர் செ. வேலுசாமி தலைமையில் பலர் மாலை அணிவித்தனர். திமுக சார்பில் மாநகரச் செயலர் டி.கே.ஜி. நீலமேகம் தலைமையில் அவைத் தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோரும், மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் பி.ஜி. ராஜேந்திரன் தலைமையில் பழனியப்பன் உள்ளிட்டோரும், தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் துணைத் தலைவர் கோ. அன்பரசன், வட்டாரத் தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏஐடியுசி மாநிலச் செயலர் சி. சந்திரகுமார், கட்சியின் மாவட்டப் பொருளாளர் என். பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரும், மதிமுக சார்பில் மாநகரச் செயலர் வி. தமிழ்ச்செல்வன் தலைமையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மைய மாவட்டச் செயலர் எஸ். சொக்கா ரவி உள்ளிட்டோரும் மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினர்.
கும்பகோணம்: கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் கெளதமன் தலைமையிலும், திமுக சார்பில் நகரச்
செயலர் தமிழழகன் உள்ளிட்டோரும், முழையூர் சமத்துவபுரத்திலுள்ள பெரியார் சிலைக்கு திமுக ஒன்றியச் செயலர் அசோக்குமார் உள்ளிட்டோரும் மாலை அணிவித்தனர்.
பட்டுக்கோட்டையில்... பட்டு க்கோட்டை வழக்குரைஞர்கள் சங்கத்தில் தலைவர் ஆர்.பிரகாசம் தலைமையில் செயலர் பி.என்.சற்குணம், வழக்குரைஞர் அ.அண்ணாதுரை ஆகியோர் முன்னிலையில் பெரியார் படத்துக்கு வழக்குரைஞர் வே.சிதம்பரம் மாலை அணிவித்தார். வழக்குரைஞர்கள் மா.குழந்தைசாமி, சுப்பு.ஆறுமுகம், ஏ.ஜி. மணிகண்டன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சுக்கிரன்பட்டியில்... சுக்கிரன்பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழக நிறுவனர், தலைவர் சதா.சிவக்குமார் மாலை அணிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆப்கனில் நிலநடுக்கம்! ஜம்மு - காஷ்மீர், தில்லி வரை உணரப்பட்ட அதிர்வு!

டி20 உலகக் கோப்பை: அயர்லாந்துக்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

லண்டனில் தெலங்கானா மாணவர் சடலமாக மீட்பு: உடலை தாயகம் கொண்டுவர குடும்பத்தினர் கோரிக்கை!





