கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
பாபநாசம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.


பாபநாசம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பாபநாசம் அருகே படுகை புதுத்தெருவை சேர்ந்தவர் பாலு(35). இவர் செவ்வாய்க்கிழமை பாபநாசம் பழைய பேருந்து நிலையம் முன்பு நின்றுக்கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த அரையபுரம் ரயில்வே கேட் பகுதியை சேர்ந்த முத்து (45) என்பவர் பாலுவிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 500 பணம் கேட்டாராம். பாலு தர மறுத்ததால், ஆத்திரமடைந்த முத்து பாலுவின் சட்டையிலிருந்த 100 ரூபாயை எடுத்து கொண்டு ஓடிவிட்டாராம்.
இதுகுறித்து பாலு அளித்த புகாரின்பேரில், பாபநாசம் போலீஸார் வழக்குப் பதிந்து முத்துவை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...