எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்  தெப்பக்குளத்தில் செத்து மிதந்த மீன்கள்: போலீஸார் விசாரணை

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை மர்மமான முறையில் மீன்கள் செத்து மிதந்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On :22 அக்டோபர் 2018, 3:58 am

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை மர்மமான முறையில் மீன்கள் செத்து மிதந்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே கோயிலுக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கரிலான தெப்பக்குளம் உள்ளது. கோயிலில் திருவிழா காலத்தில் இக்குளத்தில்தான் தெப்பம் விடப்படும். அது மட்டுமன்றி இக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இக்குளத்தில் புனித நீராடி, குளத்து நீரை தலையில் தெளித்துச் செல்வது வழக்கம். மேலும், அம்மனுக்கு முடிக் காணிக்கை செலுத்தும் பக்தர்களும் இக்குளத்தில் நீராடுவர்.
இந்தத் தெப்பக்குளம் அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலும்,  மாரியம்மன் கோயில் தஞ்சை அரண்மனை தேவஸ்தான கட்டுப்பாட்டிலும் உள்ளன. 
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென கோயில் தெப்பக்குளத்தில் இருந்த மீன்கள் கொத்து, கொத்தாக செத்து மிதந்தன. இதைப் பார்த்த பக்தர்களும், அப்பகுதிவாசிகளும் அதிர்ச்சி அடைந்தனர். செத்து மிதந்த மீன்களால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மூக்கைப் பிடித்தபடியே செல்ல நேர்ந்தது. வார இறுதி நாள் என்பதாலும், புரட்டாசி விரதம் முடிந்த நிலையிலும் ஞாயிற்றுக்கிழமை அதிகளவிலான பக்தர்கள் வந்திருந்தனர். இந்நிலையில் கோயில் தெப்பகுளத்தில் மீன்கள் செத்து மிதந்ததைப் பார்த்த அவர்கள், குளத்தின் புனிதத்தன்மை  கெட்டுவிட்டதாகத் தெரிவித்தனர். 
கோயிலை நிர்வகிக்கும் அரண்மனை தேவஸ்தானமோ, கோயில் தெப்பக்குளத்தை நிர்வகிக்கும் அறநிலையத்துறையோ தெப்பக்குளத்தை கண்டுகொள்வதில்லை. இதனால் இரவு நேரங்களில் குளத்தின் படித்துறையில் இயற்கை உபாதை கழிப்பதும், மது அருந்திவிட்டு பாட்டில்களை குளத்தின் தண்ணீரில் வீசி விட்டு செல்வதும் வாடிக்கையாக உள்ளது. 
இதனால் கூட குளத்தில் இருந்த மீன்கள் செத்து இருக்கலாம். அல்லது குளத்தின் மீன்களை கொல்வதற்காக யாரேனும் பூச்சிமருந்து தூவி இருக்கலாம் என பக்தர்களும், அப்பகுதி மக்களும் சந்தேகிக்கின்றனர். மேலும், நாள்தோறும் முறையாக குளத்தைப் பராமரித்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது எனவும் பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  தஞ்சை தாலூகா காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.