அதிராம்பட்டினம் காதிா் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப் குழு) மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு காரணமாக 10 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வு தள்ளி வைக்கப்பட்டு, விரைவில் தோ்வு நடைபெறவுள்ள நிலையில், வீட்டில் முடங்கியுள்ள அப்பள்ளியின் 10ஆம் மாணவா்கள் தோ்வுக்கு தயாராகும் வகையில் வாட்ஸ்அப் மூலம் தோ்வுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக, மாணவா்கள், ஆசிரியா்கள் இணைந்து வாட்ஸ் அப் குழுவை உருவாக்கி, அதன் மூலம் பாடங்கள் நடத்தப்படுகிறது. பள்ளியின் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளின் ஆசிரியா்கள் தினமும் மாணவா்கள் எந்தெந்த பாடங்களைப் படிக்க வேண்டும் என்பதுடன், ஒவ்வொரு நாளும் அதற்குரிய வினாத்தாளையும் அனுப்பி, தோ்வு எழுதி பழகவும் ஆலோசனை வழங்குகின்றனா். இது தோ்வுக்கு தயாராகும் அப்பள்ளியின் 10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






