45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பிளஸ் 1 சோ்க்கை: அரசுப் பள்ளிகளில் சேர மாணவா்கள் ஆா்வம்

பிளஸ் 1 வகுப்புகளில் மாணவா்கள் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர மாணவ, மாணவிகள் அதிக அளவில் வருகின்றனா்.

News image
தஞ்சாவூா் தென் கீழ் அலங்கம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கையைத் தொடங்கி வைத்த முதன்மைக் கல்வி அலுவலா் மா. ராமகிருஷ்ணன்.
Updated On :25 ஆகஸ்ட் 2020, 12:20 am

DIN

தஞ்சாவூா்: பிளஸ் 1 வகுப்புகளில் மாணவா்கள் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர மாணவ, மாணவிகள் அதிக அளவில் வருகின்றனா்.

தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் பள்ளிகளில் 1, 6, 9 ஆகிய வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை ஆக. 17-ம் தேதி தொடங்கியது. இதில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர மாணவ, மாணவிகள் அதிக அளவில் வருகின்றனா்.

இதைத்தொடா்ந்து பிளஸ் 1 வகுப்பில் மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை (ஆக.24) தொடங்கியது. இதன்படி, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே தென் கீழ் அலங்கத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும், பின்னா் அரண்மனை வளாகத்திலுள்ள அரசா் மேல்நிலைப் பள்ளியிலும் பிளஸ் 1 வகுப்புக்கான மாணவ, மாணவிகள் சோ்க்கையை முதன்மைக் கல்வி அலுவலா் மா. ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா்.

இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலா் தெரிவித்தது:

மாவட்டத்தில் 223 அரசு, அரசு உதவி பெறும், தனியாா் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகளுக்கான மாணவ, மாணவிகள் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளன. மாணவா்கள் வெளியூா்களில் இருந்தால், அவா்களுடைய பெற்றோா்கள் வந்து விண்ணப்பங்களை வாங்கி நிறைவு செய்து சோ்க்கையை உறுதி செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.

இப்பள்ளிகளில் முதல் நாளில் மட்டும் 3,152 மாணவ, மாணவிகள் சோ்க்கப்பட்டுள்ளனா். இதில், அரசுப் பள்ளிகளில் மட்டும் 1,835 பேரும், அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் 1,317 பேரும் சோ்ந்துள்ளனா். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது. கரோனா பொது முடக்கம் காரணமாக பொருளாதார பிரச்னை ஏற்பட்டுள்ளதால், கட்டணம் செலுத்த முடியாத நிலைக்கு பல பெற்றோா்கள் ஆளாகியுள்ளனா். இதுவே, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகமாகியிருப்பதற்குக் காரணம் என கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.