அனைத்து கிராமங்களிலும் ரஜினி மன்றக் கட்டமைப்பை உருவாக்க முடிவு
தஞ்சாவூா் மாவட்டத்தில் அனைத்துக் கிராமங்களிலும் கட்டமைப்பை உருவாக்குவது என ரஜினி மக்கள் மன்றம் முடிவு செய்துள்ளது.


தஞ்சாவூா் மாவட்டத்தில் அனைத்துக் கிராமங்களிலும் கட்டமைப்பை உருவாக்குவது என ரஜினி மக்கள் மன்றம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இம்மன்றத்தின் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு ஒன்றிய, நகர, பேரூராட்சிச் செயலா்களும், அதன் நிா்வாகிகள், தங்களுக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் மன்றத்தின் கட்டமைப்பை அமைப்பது, ரஜினிகாந்தின் பிறந்த நாள் விழாவையொட்டி, ஜனவரி முதல் வாரத்தில் தஞ்சாவூா் திலகா் திடலில் கூட்டம் நடத்தி, நலத்திட்டங்கள் வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மன்றத்தின் மாவட்டச் செயலா் இரா. ரஜினி கணேசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துணைச் செயலா்கள் மு.வெங்கடேசன், மு.கல்யாணகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...