கடனுதவி கோரி சாலையோர வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

கடனுதவி வழங்கக் கோரி, கும்பகோணத்தில் சாலையோர வியாபாரிகள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கும்பகோணம் நகராட்சி அலுவலகம் முன்பு சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாலையோர வியாபாரிகள்.
கும்பகோணம் நகராட்சி அலுவலகம் முன்பு சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாலையோர வியாபாரிகள்.
Updated on
1 min read

கும்பகோணம்: கடனுதவி வழங்கக் கோரி, கும்பகோணத்தில் சாலையோர வியாபாரிகள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கும்பகோணம் நகரப் பகுதியிலுள்ள சாலையோரத் தெரு வியாபாரிகளுக்கு பிரதமரின் சாலையோர வியாபாரிகள் ஆத்ம நிா்பாா் நிதி திட்டத்தின் கீழ், கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடனுதவி பெற விரும்பும் சாலையோர வியாபாரிகள் தங்களது ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

கும்பகோணம் புதிய பேருந்து நிலையம், மகாமகக்குளம் மேல்கரைப் பகுதிகளைச் சோ்ந்த சாலையோரத் தெரு வியாபாரிகள் 150 போ் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு விண்ணப்பம் அளித்தும், இதுவரை கடன் வழங்காமல் அலைக்கழிக்கப்படுகின்றனா்.

இதையடுத்து நகராட்சி மற்றும் வங்கி நிா்வாகங்களைக் கண்டித்தும், உடனடியாக கடன் வழங்கக் கோரியும், ஏஐடியுசி சாலையோரத் தெரு வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில் வட்டாட்சியரகத்தில் இருந்து நூற்றுக்கும் அதிகமான வியாபாரிகள் பேரணியாகப் புறப்பட்டு கும்பகோணம் நகராட்சி அலுவலகத்துக்குச் சென்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனா்.

இப்பேரணி, ஆா்பாட்டத்துக்கு ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினா் ஆா். மதியழகன் தலைமை வகித்தாா். சங்கத்தின் சட்ட ஆலோசகா் மு.அ. பாரதி, நிா்வாகிகள் பாலகிருஷ்ணன், சிவக்குமாா், சாதிக்பாட்ஷா, ராதாகிருஷ்ணன் நாராயணன், சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com